மாவட்ட ரீதியான கோவிட் தொற்று அப்டேற் (28.09.2021)

வடக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 31 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

யாழ். போதனா மருத்துவமனையின் ஆய்வகத்தில் 186 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த முடிவின் பிரகாரம்,

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 9 பேரும், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் 4 பேரும், யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேரும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் ஒருவரும், பலாலி விமானப் படை முகாமில் ஒருவருமாக யாழ். மாவட்டத்தில் 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேர், வவுனியா பொது மருத்துவமனையில் ஒருவர் என் வவுனியா மாவட்டத்தில் 7 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.

கிளிநொச்சி பொது மருத்துவமனையில் ஒருவர், இரணைமடு விமாப்படை முகாமில் 4 பேர், முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் இருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

மாவட்ட ரீதியான கோவிட் தொற்று அப்டேற் (28.09.2021)

எஸ் தில்லைநாதன்