
posted 22nd September 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 31 பேர் உட்பட வடக்கில் 56 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று செவ்வாய்கிழமை 1 63 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில், யாழ். போதனா மருத்துவமனையில் 25 பேர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 3 பேர், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் 2 பேர், ஊர்காவற்றுரை ஆதார மருத்துவமனையில் ஒருவர் என்று யாழ். மாவட்டத்தில் 31 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் 6 பேர், கிளிநொச்சி பொது மருத்துவமனையில் 3 பேர், மன்னார் பொது மருத்துவமனையில் 2 பேர், வவுனியா செட்டிக்குளத்தில் ஒருவர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.
தவிர, பலாலி விமானப் படை முகாமில் 8 பேரும், காங்கேசன்துறை கடற்படை முகாமில் 4 பேரும், இரணைமடு விமானப் படை முகாமில் ஒருவரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

எஸ் தில்லைநாதன்