
posted 30th September 2021
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஆறு பேர் உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்துக்கு நேற்று அனுப்பப்பட்ட மாதிரிகள் பி. சி. ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே வடக்கில் உயிரிழந்த 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் எம். செல்வகுமரன் (வயது 45) என்பவர் உயிரிழந்தார்.
கிளிநொச்சி பொது மருத்துவமனையில் கந்தையா ஸ்ரீகருணாகரன், செல்லதம்பி சிவகடாட்சம் (வயது 71) ஆகியோர் உயிரிழந்தனர்.
வவுனியா பொது மருத்துவமனையில் எட்வேர்ட் ஜெகதீஸ்வரன் (வயது 66), நாகலிங்கம் தர்மபாலன் (வயது 69) என இருவர் உயிரிழந்தனர்.
இதேபோன்று முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட பழனிமுத்து கண்ணன்(வயது 79) என்பவரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

எஸ் தில்லைநாதன்