மாவட்ட ரீதியான கொரோனாத் தொற்றும், மரணமும் - 22.09.2021

யாழ்.மாவட்டத்தில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட 64 வயதுடைய கந்தசாமி தவமணிதேவி, மற்றும் 75 வயதுடைய செல்லையா இலங்கநாதன் ஆகியோரே உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 33 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா மருத்துவமனை, யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடங்களின் முடிவுகளின் அடிப்படையிலேயே இந்தத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூட முடிவின் பிரகாரம், யாழ்.போதனா மருத்துவமனையில் 11 பேர், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் மூவர், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் இருவர், கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் இருவர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் இருவர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிற்றலில் ஒருவர், காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர் என மாவட்டத்தில் 24 பேர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் ஒருவர், உருத்திரபுரம் பிரதேச மருத்துவமனையில் ஒருவர் என்று மாவட்டத்தில் இருவரும்,
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர், செட்டிக்குளம் மருத்துவமனையில் 02 பேர், வவுனியா மாவட்ட மருத்துவமனையில் ஒருவர், பூவரசங்குளம் பிரதேச மருத்துவமனையில் ஒருவர் என்று 8 பேரும், மன்னார் மாவட்ட மருத்துவமனையில் இருவர், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் ஒருவரும் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.

மாவட்ட ரீதியான கொரோனாத் தொற்றும், மரணமும் - 22.09.2021

எஸ் தில்லைநாதன்