
posted 1st September 2021
கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் 3 பேர், வவுனியாவில் 5 பேர், கிளிநொச்சியில் 3 பேர், முல்லைத்தீவில் ஒருவர் என நேற்று மாத்திரம் 12 பேர் உயிரிழந்தனர்.
விபரங்கள் வருமாறு:
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சங்கானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவரும்
யாழ். மாநகரை சேர்ந்த 64 வயது ஆணும், 47 வயது பெண்ணுமாக இருவருமாக மூவர் உயிர் இழந்துள்ளனர்
வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 76 வயது பெண் மற்றும் பத்தினியார் மகிழங்குளம், நெடுங்குளம், கோவில்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த நான்கு பேருமாக 4 பேர் தொற்றால் மரணமாகினர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பொது மருத்துவமனையால் யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்துக்கு மாதிரிகள் 73 வயது பெண், 72 வயது ஆண், 87 வயது பெண் ஆகியோரின் சடலங்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 வதுய ஆண் ஒருவர் தொற்றால் உயிரிழந்தார்.
இத்துடன்,
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட வரணியில் 98 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிழந்துள்ளார் (அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது).
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த கட்டுவனையைச் சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.
அல்வாய் மேற்கு திக்கத்தைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக உயர்வடைந்துள்ளது.

எஸ் தில்லைநாதன்