
posted 5th September 2021
மன்னார் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளா த.வினோதன் 04.09.2021 அன்று மன்னார் மாவட்டத்தின் கொரோனா தொடர்பான நாளாந்தம் வெளியிடும் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;
மன்னார் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த பி.சீ.ஆர். மற்றும் அன்ரிஜன் பரிசோதனையில் சனிக்கிழமை (04.09.2021) 28 நபர்கள் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளதாகவும், முசலி பிரதேச பொது சுகாதார சேவை அதிகாரி பிரிவில் 24 பேரும், அன்ரிஜன் பரிசோதனையில் மன்னார் பொது வைத்தியசாலையில் 02 பேரும், சிலாபத்துறை மாவட்ட வைத்தியசாலையில் 01 நபரும், மடு பொது சுகாதார சேவை அதிகாரி பிரிவில் 01 நபருமாக மொத்தம் 28 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 1768 கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளதாகவும், இந்த மாதம் செப்டம்பர் சனிக்கிழமை வரை 84 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறினார்.
ஆனால், இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இறந்தவர் தொகை 20 எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் (செப்டம்பர்) 189 பி.சீ.ஆர். பரிசோதனைகளும், மொத்தமாக 28,014 பி.சீ.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும், 04 ந் திகதி 254 நபர்கள் பி.சீ.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 62,543 பேருக்கும் முதலாவது கொரோனா தடுப்பூசியும், 55, 384 நபர்களுக்கும் இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ