மன்னார் கல்வி வலயத்தில் 1203 மாணவர்கள் தோற்றியதில் 808 மாணவர்கள் சித்தி

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையானது இவ் வருடம் 2021 மார்ச் மாதம் நடைபெற்று இதற்கான பரீடசை பெறுபேறுகள் 23.09.2021 அன்று வெளியாகியதில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் கல்வி வலயத்தில் 1203 மாணவர்கள் தோற்றியதில் 808 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் மன்னார் கல்வி வலயத்திலுள்ள 42 பாடசாலைகளில் கணிதம் உட்பட ஆறு பாடங்கள் அதாவது 3 சீ. 3 எஸ் பெறுபேறுகளுக்கு மேல் சித்தியடைந்த மாணவர்களின் விகிதாசாரத்துக்கு அமைவாக முன்னனி பாடசாலைகளின் விபரங்கள் மன்னார் கல்வி வலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மன்னார் நகரிலுள்ள பிரபல தேசிய பாடசாலைகள் மூன்றும் விகிதாசார அடிப்படையில் முறையே 9, 12, மற்றும் 21 வது இடங்களில் காணப்படுகின்றன.

க.பொ.த. சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் விகிதாசார அடிப்படையில் பாடசாலைகளின் முன்னனி நிலை பின்வருமாறு;

-கரிசல் றோ.க.த.பாடசாலையில் 15 மாணவர்கள் தோற்றி 15 மாணவர்கள் 100 வீதம் சித்தி.

-ஓலைத்தொடுவாய் றோ.க.த.பாடலையில் 2 மாணவர்கள் தோற்றி 2 மாணவர்கள் 100 வீதம் சித்தி

-கற்கடந்தகுளம் றோ.க.த.பாடசாலையில் 16 மாணவர்கள் தோற்றி 15 மாணவர்கள் 93.8 வீதம் சித்தி

-பரிகாரிகண்டல் அ.த.க பாடசாலையில் 36 மாணவர்கள் தோற்றி 33 மாணவர்கள் 91.7 வீதம் சித்தி

-சிலாவத்துறை அ.மு.பாடசாலையில் 11 மாணவர்கள் தோற்றி 10 மாணவர்கள் 90.9 வீதம் சித்தி

-கொண்டச்சி அ.மு.க.பாடசாலையில் 16 மாணவர்கள் தோற்றி 14 மாணவர்கள் 87.5 வீதம் சித்தி

-இலகடிப்பிட்டி றோ.க.த.க.பாடசாலையில் 6 மாணவர்கள் தோற்றி 5 மாணவர்கள் 83.3 வீதம் சித்தி

-முசலி தேசிய பாடசாலையில் 50 மாணவர்கள் தோற்றி 41 மாணவர்களும் 82 வீதம் சித்தி

-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் 118 மாணவிகள் தோற்றி 95 மாணவர்கள் 80.5 வீதம் சித்தி

-டிலாசால் கல்லூரியில் மாணவர்கள் 42 தோற்றி 33 மாணவர்கள் 78.6 வீதம் சித்தி

-ஆன்ஸ் மத்திய மகா வித்தியாலயத்தில் 45 மாணவர்கள் தோற்றி 34 மாணவர்கள் 75.6 வீதம் சித்தி

-புனித சவேரியார் ஆண்கள் தேசியக் கல்லூரியில் 135 மாணவர்கள் தோற்றி 102 மாணவர்கள் 75.6 வீதம் சித்தி

-தலைமன்னார் பியர் அ.த.க பாடசாலையில் 38 மாணவர்கள் தோற்றி 28 மாணவர்கள் 73.7 வீதம் சித்தி

-தோட்டவெளி அ.த.க பாடசாலையில் 19 மாணவர்கள் தோற்றி 14 மாணவர்கள் 73.7 வீதம் சித்தி

-அரிப்பு றோ.க.த.பாடசாலையில் 31 மாணவர்கள் தோற்றி 22 மாணவர்கள் 71 வீதம் சித்தி

-புனித லூசியா மகா வித்தியாலயத்தில் 30 மாணவர்கள் தோற்றி 21 மாணவர்கள் 70 வீதம் சித்தி

-சூரியகட்டைக்காடு றோ.க.த.க.பாடசாலையில் 6 மாணவர்கள் தோற்றி 4 மாணவர்கள் 66.7 வீதம் சித்தி

-புனித யோசவ் மகா வித்தியாலயத்தில் 33 மாணவர்கள் தோற்றி 22 மாணவர்கள் 66.7 வீதம் சித்தி

-உயிலங்குளம் றோ.க.த.க.பாடசாலையில் 15 மாணவர்கள் தோற்றி 10 மாணவர்கள் 66.7 வீதம் சித்தி

-பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தில் 98 மாணவர்கள் தோற்றி 65 மாணவர்கள் 66.3 வீதம் சித்தி

-சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் 88 மாணவர்கள் தோற்றி 58 மாணவர்கள் 65.9 வீதம் சித்தி

-நறுவிலிக்குளம் அ.த.க பாடசாலையில் 16 மாணவர்கள் தோற்றி 10 மாணவர்கள் 62.5 வீதம் சித்தி

-மாவிலங்கேணி றோ.க.த.க.பாடசாலையில் 18 மாணவர்கள் தோற்றி 11 மாணவர்கள் 61.1 வீதம் சித்தி

-சிவராஐh இந்து வித்தியாலயத்தில் 12 மாணவர்கள் தோற்றி 7 மாணவர்கள் 58.3 வீதம் சித்தி

-எருக்கலம்பிட்டி மகளீர் மகா வித்தியாலயத்தில் 21 மாணவிகள் தோற்றி 12 மாணவிகள் 57.1 வீதம் சித்தி

-கௌரியம்மாள் அ.த.க பாடசாலையில் 14 மாணவர்கள் தோற்றி 8 மாணவர்கள் 57.1 வீதம் சித்தி

-முருங்கன் மகா வித்தியாலயத்தில் 57 மாணவர்கள் தோற்றி 32 மாணவர்கள் 56.1 வீதம் சித்தி

-புனித மதர் திரேசா றோ.க.த.க.பாடசாலையில் 17 மாணவர்கள் தோற்றி 9 மாணவர்கள் 52.9 வீதம் சித்தி

-அல் அஷார் மகா வித்தியாலயத்தில் 24 மாணவர்கள் தோற்றி 12 மாணவர்கள் 50 வீதம் சித்தி

-உயிலங்குளம் றோ.க.த.க.பாடசாலையில் 2 மாணவர்கள் தோற்றி 1 மாணவர்கள் 50 வீதம் சித்தி

-வேப்பன்குளம் அ.மு.க.பாடசாலையில் 15 மாணவர்கள் தோற்றி 7 மாணவர்கள் 46.7 வீதம் சித்தி

-பி.பி.பொற்கேணி அ.மு.க.பாடசாலையில் 11 மாணவர்கள் தோற்றி 5 மாணவர்கள் 45.5 வீதம் சித்தி

-பண்டாரவெளி மகா வித்தியாலயத்தில் 25 மாணவர்கள் தோற்றி 11 மாணவர்கள் 44 வீதம் சித்தி

-அல்மினா மகா வித்தியாலயத்தில் 14 மாணவர்கள் தோற்றி 6 மாணவர்கள் 42.9 வீதம் சித்தி

-எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய மகா வித்தியாலயத்தில் 22 மாணவர்கள் தோற்றி 9 மாணவர்கள் 40.9 வீதம் சித்தி

-உனைஸ் பாரூக் அ.மு.க. பாடசாலையில் 6 மாணவர்கள் தோற்றி 2 மாணவர்கள் 33.3 வீதம் சித்தி

-புனித.லோறன்ஸ் றோ.க.வித்தியாலயத்தில் 15 மாணவர்கள் தோற்றி 5 மாணவர்கள் 33.3 வீதம் சித்தி

-ஷாகிரா அ.மு.க. பாடசாலையில் 6 மாணவர்கள் தோற்றி 2 மாணவர்கள் 33.3 வீதம் சித்தி

-துள்ளுக்குடியிருப்பு றோ.க.த.க.பாடசாலையில் 13 மாணவர்கள் தோற்றி 4 மாணவர்கள் 30.8 வீதம் சித்தி

-அல் ஜெஸ்மின் மகா வித்தியாலயத்தில் 17 மாணவர்கள் தோற்றி 5 மாணவர்கள் 29.4 வீதம் சித்தி

-மடுக்கரை அ.த.க பாடசாலையில் 8 மாணவர்கள் தோற்றி 2 மாணவர்கள் 25 வீதம் சித்தி

-புதுக்குடியிருப்பு அ.மு.க. பாடசாலையில் 20 மாணவர்கள் தோற்றி 5 மாணவர்கள் 25 வீதம் சித்தி

மன்னார் கல்வி வலயத்தில் 1203 மாணவர்கள் தோற்றியதில் 808 மாணவர்கள் சித்தி

வாஸ் கூஞ்ஞ