
posted 10th September 2021
மன்னார் மாவட்டத்தில் வியாழக்கிழமை (09.09.2021) கிடைக்கப்பெற்ற தகவலில் 11 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் பொது வைத்தியசாலையில் 03 பேருக்கு பி.சீ.ஆர். பரிசோதனை மூலமும், மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளினாலே மன்னார் பொது வைத்தியசாலையில் 02 பேரும், சிலாவத்துறை மாவட்ட வைத்திசாலையில் ஒருவரும், மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும் மற்றும் மடுவில் ஒருவருக்கும், கடற்படையினர் ஒருவருக்கும் இத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மொத்தமாக மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றாளர்களின் தொகை 1860 ஆக உயர்ந்துள்ளது.
இந் நடப்பு மாதத்தில் (செப்ரம்பர்) உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்கள் 176, மரணங்கள் 22 என அறிக்கை தெரிவிக்கின்றது.
பி.சீ.ஆர். பரிசோதனைகள் மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 28,616ம், வியாழக்கிழமை (09) மட்டும் அன்று 445 சோதனைகளும் செய்யப் பட்டன.
முதலாவது கொவிட் தடுப்பூசி 68,375 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 55906 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ