மன்னாரில் மேலும் 19 பேருக்கு கொரோனா - பணிப்பாளர் த.வினோதன்
மன்னாரில் மேலும் 19 பேருக்கு கொரோனா - பணிப்பாளர் த.வினோதன்

பணிப்பாளர் த.வினோதன்

மன்னாரில் திங்கள் கிழமை (06.09.2021) மன்னார் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளருக்கு கிடைக்கப்பெற்ற தகவலில் 19 பேருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை மன்னாரில் கொரோனா தொற்றாளர்களாக மொத்தம் 1792 ஆக உயர்ந்துள்ளதாக மன்னார் சுகாதார சேவை பணிப்பாளர் த.வினோதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திங்கள் கிழமை (06.09.2021) மன்னாரில் கொவிட் 19 தொடர்பான விபரங்களை பணிப்பாளர் த.வினோதன் அறிக்கையிடுகையில்;

திங்கள் கிழமை (06.09.2021) 19 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், இவர்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் மன்னார் பொது வைத்திசாலையில் 01 நபரும்; அன்ரிஜன் பரிசோதனையில் 18 நபர்களும் தொற்றாளர்களாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது இந்த அன்ரிஜன் பரிசோதனையில் மன்னார் பொது வைத்தியசாலையில் 02 நபர்களும். பேசாலை மாவட்ட வைத்திசாலையில் 05 பேரும், தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 நபர்களும், முருங்கன் ஆதார வைத்தியசாலை, எருக்கலம்பிட்டி மாவட்ட வைத்திசாலை மற்றும் விடத்தல்தீவு மாவட்ட வைத்திசாலை ஆகியவற்றில் தலா ஒருவரும், மன்னார் பொது சுகாதார பிரிவில் 05 பேரும், மடு பொது சுகாதார பிரிவில் ஒருவருமாக மொத்தம் 19 பேரே இவ்விடங்கள்ல் கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 1792 கொரோனா தொற்றாளர்களாகவும். இம் மாதம் (செப்படம்பர்) இத் தொற்றாளர்கள் 108 ஆகவும் அதிகரித்துள்ளனர்.

இந்த நாளில் (06) 65 நபர்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 28,070 பேருக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 20 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் 62,650 முதலாவது தடுப்பூசிகளும், 55,469 இரண்டாவது தடுப்பூசிகளும் எற்றப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார சேவை பணிப்பாளர் த.வினோதன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் மேலும் 19 பேருக்கு கொரோனா - பணிப்பாளர் த.வினோதன்

வாஸ் கூஞ்ஞ