மன்னாரில் கோவிட் தொற்று அப்டேற் (28.09.2021)

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2100 க்கு மேல் உயர்ந்துள்ளது. இம் மாதம் (செம்டம்பர்) இதுவரை 422 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தனது நாளாந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் மன்னார் மாவட்டத்தின் கொரோனா தொற்றுநோய் தொடர்பாக நாளாந்தம் வெளியிடும் பதிவில் தெரிவித்திருப்பதாவது;

28.09.2021 அன்று மன்னார் மாவட்டத்தில் 06 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒருவர், எருக்கலம்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் மூவர், விடத்தல்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருமாக மொத்தம் ஆறு நோயார்களே இனம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் இந்த மாதம் (செப்டம்பர்) இதுவரை 422 கொவிற் தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இத்துடன் மன்னாரில் மொத்தமாக 2106 கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாதம் (09) 1162 பேருக்கு எடுக்கப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனைகள் உட்பட மொத்தமாக 28,922 பி.சீ.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை 78,156 பேருக்கு முதலாவது கொவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் 59,624 நபர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் கோவிட் தொற்று அப்டேற் (28.09.2021)

வாஸ் கூஞ்ஞ