
posted 14th September 2021
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 1966 ஆக உயர்ந்துள்ளதுடன் இறப்பு 23 ஆக உயர்ந்துள்ளதாகவும் மன்னார் பிராந்திய சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.
பணிப்பாளர் த.வினோதன், வெளியிடும் தனது நாளாந்த (13) அறிக்கையில்:
மன்னார் மாவட்டத்தில் இதுவரை காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட 28,674 பி.சீ.ஆர். பரிசோதனைகளில் 1966 கொவிட் தொற்றாளார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
12ந் திகதி (12.09.2021) ஒருவர் கொவிட் தொற்றால் உயிர் இழந்ததைத் தொடர்ந்து தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் இதன் இறப்பு 23 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் 12.09.2021 அன்று, 6 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில், மன்னார் பொது வைத்தியசாலையில் ஐவரும், விடத்தல்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் 12.09.2021 அன்று, 58 பி.சீ.ஆர். எடுக்கப்பட்டுள்ளதுடன் இம் மாதம் மொத்தமாக 914 பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ