மன்னாரில் கொரோனா தொற்றாளர்கள் 1740 ஆக உயர்வு

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன்
தனது அறிக்கையில்;

மன்னார் மாவட்டத்தில் வெள்ளிக் கிழமை (03.09.2021) மேலும் 19 கொரோனா தொற்றாளர்கள் உட்பட தொற்றாளர்களின் எண்ணிக்கை 1740 ஆக உயர்ந்துள்ளது எனவும் இதுவரை 27, 967 பி.சீ.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இன்றுவரை 20 பேர் கொரோனாவினால் இறந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நோயாளார்கள், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒன்பது பேரும், முசலி சுகாதார சேவை பிரிவில் இருவரும், வங்காலை மாவட்ட வைத்தியசாலையில் மூவரும், அடம்பன், எருக்கலம்பிட்டி, பேசாலை ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளில் ஒவ்வொருவருமாக மொத்தம் 19 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும் புரட்டாதி மாதம் 207 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதுடன் 56 நபர்கள் கொரோனா
தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

மன்னாரில் கொரோனா தொற்றாளர்கள் 1740 ஆக உயர்வு

வாஸ் கூஞ்ஞ