
posted 8th September 2021

மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபா செலவில் மன்னார் பொது மயான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு புதன் கிழமை (08.09.2021) காலை மன்னார் நகர சபை தலைவர் ஞாணப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் மன்னார் பொது மயானத்தில் நடைபெற்றது.
இவ் அடிக்கல் நாட்டு நிகழ்வில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பொன்னம்பலம் சிறிவர்ணன் மன்னார் நகர சபை செயலாளர் கணக்காளர் மன்னார் நகர சபை உப தலைவர் உட்பட நகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு வேலைத்திட்டங்களுக்கான அடிக்கற்களை நாட்டி வைத்தனர்
இவ் அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் அஞ்சலி மண்டபம் கிரியைகள் மண்டபம் நடைபாதைகளுக்கான கற்கள் பதித்தல் பிரார்த்தனை மண்டப திருத்த வேலைகள் மற்றும் மலசலகூடங்கள் அமைப்பதற்கான வேலைத் திட்டங்களாகவே இவைகள் அமைய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ