மன்னாரில் 31ந் திகதி 32 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

மன்னார் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட பி.சீ.ஆர். மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளில் செவ்வாய் கிழமை (31.08.2021) கிடைக்கப்பெற்ற அறிக்கையில் 32 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரின் த.வினோதன் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

பி.சீ.ஆர். பரிசோதனையில் 14 நபர்களும், அன்ரிஜன் பரிசோதனையில் 18 நபர்களும் மொத்தமாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது பி.சீ.ஆர். பரிசோதனையில் மன்னார் பொது வைத்தியசாலையில் 02 பேரும், மடு பொது சுகாதார சேவை அதிகாரி பிரிவில் 12 நபர்களுக்கும், அன்ரிஜன் பரிசோதனையில் மன்னார் பொது வைத்தியசாலையில் 06 நபர்களும், அடம்பன், எருக்கலம்பிட்டி மற்றும் சிலாபத்துறை மாவட்ட வைத்திசாலைகளில் தலா ஒருவரும். முருங்கன் ஆதார வைத்தியசாலையில் 01. மடு பொது சுகாதார சேவை அதிகாரி பிரிவில் 04 நபர்களும், மாந்தை மேற்கு சுகாதார சேவை அதிகாரி பிரிவில் 02 பேரும், நானாட்டானில் ஒருவரும் மற்றும் மன்னார் பொது சுகாதார சேவை அதிகாரிகள் பிரிவில் ஒருவருமாக 18 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 1684 கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர் எனவும், இவ் வருடம் அதாவது 2021 ம் ஆண்டு மட்டும் 1667 பேர் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆவணி மாதம் மட்டும் (08.2021) 643 நபர்கள் மன்னார் மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பானது இதுவரை மன்னார் பகுதியில் 19 ஆகவே காணப்படுகின்றது எனவும், கடந்த ஆவணி மாதம் 1924 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதுவரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 27760 பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரைக்கும் மன்னாரில் முதலாவது தடுப்பூசிகள் 61,058ம். இரண்டாவது தடுப்பூசிகள் 50,265 ம் ஏற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் 31ந் திகதி 32 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

வாஸ் கூஞ்ஞ