
posted 12th September 2021
சனிக்கிழமை (11.09.2021) மன்னார் மாவட்டத்தில் 95 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். மடு சுகாதார அதிகாரி பிரிவில் 84 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.
பணிப்பாளர் த.வினோதன் மன்னார் மாவட்டத்தின் கொரோனா தொடர்பான நாளாந்த அறிக்கையில் 11.09.2021 அன்று சனிக்கிழமை அன்றைய நிலவரம் தொடர்பாக தெரிவித்திருப்பதாவது;
சனிக்கிழமை (11.09.2021) மன்னார் மாவட்டத்தில் 95 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், இங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் 93 பேரும், அன்ரிஜன் பரிசோதனையில் 02 பேருமே இக் கொவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இத்தொற்றாளர்களில் மடு பொது சுகாதார அதிகாரி பிரிவில் 84 தொற்றாளர்களும், கடற்படையினரில் 09 நபர்களும், பெரிய பண்டிவிருச்சான் மற்றும் தலைமன்னார் ஆகிய மாவட்ட வைத்திசாலைகளில் தலா ஒருவருமாக மொத்தம் 95 பேர்கள் கொவிட் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் 28,616 பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டடதில் 1960 கொவிட் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். ஆனால் இம்மாதம், (செப்ரம்பர்) 856 பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 276 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் மாவட்டத்தில் இற்றைவரை 22 இறப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ