
posted 12th September 2021

மகாகவி சுப்பிரமணிய பாரதியாாின் 100 வது நினவு தினம்
யாழ் இந்தியத்துணைத் தூதரகத்தில் சனிக்கிழமை (11 செப்டம்பர் 2021) நினைவு கூறப்பட்டது
யாழ் பகுதியில் உள்ள பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்கு யாழ் இந்திய தூதரகம் முயற்சிகள் மேற்கொண்டபோதும் கொவிட் 19 தாக்கம் நாட்டில் இடம்பெற்று வருவதால் இதற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லையென யாழ் இந்திய தூதரக வட்டாரம் தெரிவித்தது.
இருந்தபோதிலும் இந்திய யாழ் தூதரகத்தில் பாரதியாரின் திருவுருவ படத்தை ஸ்தாபித்து யாழ்ப்பானத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராதகஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மகாகவி பாரதியாரின் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யும் நிகழ்வை மேற்கொண்டார்.
இந்த நிகழ்வின்போது மாண்புமிகு, மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கஜன் இராமநாதன்,சுரேன் ராகவன், எம்.எ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிறீதரன்,
சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபை அவைத்
தலைவர் சி.சிவஞானம் , யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுரேஷ் பிரேமசந்திரன், மற்றும் சிவாஜிலிங்கம் , யாழ்
பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற தமிழ் விரிவுரையாளர்கள் என பலர் இணைய தளத்தின் ஊடாக இந் நிகழ்வில் கலந்து கொண்டு மகாகவி பாரதியாருக்கு மரியாதை செலுத்தியதாக யாழ் இந்திய தூதரகம் தெரிவித்தது.

வாஸ் கூஞ்ஞ