posted 15th September 2021
தலைமன்னார் பாக்குநீர் கடல் வழியாக 79 மில்லியன் ரூபா பெறுமதியான போதை பொருளை சட்டவிரோதமாக கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட நான்கு நபர்களையும் எதிர்வரும் 29.09.2021 வரை விளக்கமறியலில் வைக்கும்படி மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் கட்டளை பிறப்பித்துள்ளார்.
தலைமன்னார் கிராம கடற்கரை பகுதியில் புதன் கிழமை (15.09.2021) அதிகாலை ஒரு படகில் 79 மில்லியன் ரூபா பெறுமதியான 9 கிலோ 914 கிராம் ஐஸ் போதைப் பொருள் கடற்படையினரின் கண்காணிப்புக்குள் கைப்பற்றப்பட்டு இவற்றுடன் நான்கு சந்தேக நபர்கள் மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர்களும் கைப்பற்றப்பட்ட போதை பொருளும் நீதவான் முன்னிலையில் புதன் கிழமை (15) பிற்பகல் மன்னார் பொலிசாரால் முன்னிலை படுத்தப்பட்டிருந்தனர்.
இச் சந்தேக நபர்கள் நால்வரும் எதிர்வரும் 29.09.2021 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வாஸ் கூஞ்ஞ