
posted 19th September 2021
ஈழத்தின் மூத்த பிரபல்யமான தபேலா வாத்தியக் கலைஞர் சதா வேல்மாறன் இன்று சனிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலைக்குச் சென்றபோதே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.
விடுதலைப்போராட்ட காலத்தில் ஒலிப்பதிவாகிய கணிசமான பாடல்கள், பெருமளவான பக்திப்பாடல்களுடன் ஆயிரக்கணக்கான அரங்க நிகழ்வுகளிலும் அவர் அணி இசை செய்துள்ளார்.
அதேவேளை நூற்றுக்கணக்கான மாணவர்களையும் மிருதங்க, தபேலாக் கலைஞர்களாகவும் உருவாக்கிய பெருமைக்குரியவராகவும் விளங்கியுள்ளார்.

சதாவேல் மாறன்

எஸ் தில்லைநாதன்