பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அன்டிசன் பரிசோதனையில் 19 பேருக்கு தொற்று  உறுதி

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிசன் பரிசோதனையில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை (02) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் வந்திருந்தவர்களில் 16 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கிருந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அன்டிசன் பரிசோதனையில் 19 பேருக்கு தொற்று  உறுதி

எஸ் தில்லைநாதன்