பதுளையைச் சேரந்த 103 வயதுடைய மூதாட்டிக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது
பதுளையைச் சேரந்த 103 வயதுடைய மூதாட்டிக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

கொவிட் – 19 தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான தடுப்பூசி ஏற்றும் திட்டம் இலங்கையில் துரித வேகத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை – முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி நிலையங்களுக்கு வரமுடியாத முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் 103 வயதுடைய மூதாட்டி ஒருவருக்கும் நேற்று முன் தினம் வீட்டுக்கே சென்று சுகாதார தரப்பினரால் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

பதுளை பகுதியிலுள்ள குறித்த மூதாட்டியின் வீட்டுக்கு சென்று சுகாதார அதிகாரிகள் தடுப்பூசியை செலுத்தினர்.

பதுளையைச் சேரந்த 103 வயதுடைய மூதாட்டிக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

எஸ் தில்லைநாதன்