
posted 30th September 2021
நிமோனியா காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 38 நாள் சிசு ஒன்று பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிசு வதிரி, கரவெட்டியைச் சேர்ந்த செல்வவிநாயகர் அகிலகுமார் என்ற ஆண் சிசுவேயாகும்.
மேற்படி சிசுவுக்கு மூக்கால் குருதி வடிவதாக தொரிவித்து நேற்று புதன்கிழமை (29) பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தது.
இது தொடர்பில் கரவெட்டி மரணவிசாரணை அதிகாரி வே. பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டிருந்தார்.
பிரேதபரிசோதனை இன்று வியாழக்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட போது நுரையீரலில் கிருமித் தொற்று ஏற்பட்டு நிமோனியா காச்சலால் சிசு உயிரிழந்ததாக பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்