நிந்தவூரில் தடுப்பு மருந்தேற்றல் சேவை தொடர்கிறது

நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் வெலைத்திட்டம் வெற்றிகரமாக இடம் பெற்று வருகின்றது.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜீ.சுகுணனின் வழிகாட்டலிலும், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பரூஸா நக்பரின் நெறிப்படுத்தலிலும் இந்த தடுப்பூசி ஏற்றும் சேவை தொடர்ந்து வருகின்றது.

நிந்தவூர் பிரதேச செயலகம், பிரதேச சபை, கொவிட் தடுப்பு செயலணி உட்பட சமூக அமைப்புக்களும் இச்சேவைக்கு ஒத்துழைப்பை நல்கிவருகின்றன.

இதேவேளை நிந்தவூர் பிரதேசத்தில் நடமாடும் தடுப்பு மருந்தேற்றல் சேவை இன்று முதல் சனிக்கிழமை வரையும் தொடர விருப்பதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பரூஸா நக்பர் தெரிவித்தார்.

வயோதிபர்கள், நோயாளிகள் மற்றும் விசேட தேவையுடையோர்களுக்கான தடுப்பு மருந்தேற்றல் இந்த நடமாடும் சேவை மூலம் இடம்பெறவுள்ளது.

இந்த நடமாடும் சேவையினைப் பெற சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.

நிந்தவூரில் தடுப்பு மருந்தேற்றல் சேவை தொடர்கிறது

டாக்டர். பரூஸா நக்பர்

நிந்தவூரில் தடுப்பு மருந்தேற்றல் சேவை தொடர்கிறது