
posted 24th September 2021

எம். கே.சிவாஜிலிங்கம்
ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை ஏற்கத் தயாரில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கை அரசுடன் பேசுவதால் இருந்தால் சர்வதேச மத்தியஸ்துடன் தான் பேச வேண்டும். ஒருபோதும் இலங்கை அரசை நம்பத் தயாரில்லை. இலங்கை அரசுடன் பேச செல்வதென்பது தற்கொலைக்கு சமம். நடந்த இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்-என்றார்.

எஸ் தில்லைநாதன்