தொண்டைமானாறுசந்நிதியான் ஆச்சிரமத்தால் நிவாரண உதவி
தொண்டைமானாறுசந்நிதியான் ஆச்சிரமத்தால் நிவாரண உதவி

தொண்டைமானாறுசந்நிதியான் ஆச்சிரமத்தால்
காங்கேசன்துறை - 769 பயணிகள் சிற்றூர்தி சாரதி, நடத்துனர் குடும்பங்களுக்கு அத்தியவசியமான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.

கொவிட் - 19 இடர் கால நிவாரண உதவித் திட்டத்திற்கு அமைவாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட காங்கேசன்துறை - 769 பயணிகள் சிற்றூர்தி சேவை உரிமையாளர்களின் வரையறுக்கப்பட்ட கம்பனியை சார்ந்த சாரதிகள், நடத்துனர்களைச் சேரந்த 72 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 1,65,000 உரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருள்களான அரிசி,மா, சீனி , பருப்பு, தேயிலை உள்ளடங்கலாக வழங்கப்பட்டது.

வணக்கத்திற்குரிய மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் சந்திதியான் ஆச்சிரமத்தில் வைத்து காங்கேசன்துறை - 769 பயணிகள் சிற்றூர்தி சேவை உரிமையாளர்களின் வரையறுக்கப்பட்ட கம்பனி தலைவர், செயலாளரிடம் 21/09/2021 ந் திகதியன்று கையளிக்கப்பட்டது.

தொண்டைமானாறுசந்நிதியான் ஆச்சிரமத்தால் நிவாரண உதவி

எஸ் தில்லைநாதன்