தெல்லிப்பழையில் கொரொனாவால் ஒருவர் இறந்தார்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேசத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் மாதிரி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

P.தனராஜ் (வயது 71) என்பவரே உயிரிழந்தவர் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழையில் கொரொனாவால் ஒருவர் இறந்தார்

எஸ் தில்லைநாதன்