
posted 7th September 2021

தியாகராஜா நிரோஷ்
வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
அவரின் உடல் நிலையில் மாற்றம் உணரப்பட்டதையடுத்து நேற்றுமுன்தினம் மாலை கோப்பாய் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்புகொண்டு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனையில் அவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் குடும்பத்துடன் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன்