தன்னலமற்ற சேவையாளனை மன்னார் இழந்து நிற்கின்றது.
தன்னலமற்ற சேவையாளனை மன்னார் இழந்து நிற்கின்றது.

வங்காலையை பிறப்பிடமாகவும் நீண்ட காலமாக மன்னார் நகரை வசிப்பிடமாகவும் அன்மையில் முல்லைத்தீவில் வசிப்பிடம் கொண்டு இருந்தவேளையில் மன்னார் மாவட்டத்தில் தன்னலமற்ற சேவையாளனாக திகழ்ந்த பீ.ஏ.அந்தோனி மார்க் 21.09.2021 அன்று காலமானார்.

இவர் 32 வருடங்களாக அரச பணியில் ஈடுபட்டதுடன் காணி உதவி ஆணையாளராகவும் கடமைபுரிந்தவர்.

இவ்வாறான ஒருவர் தனக்கென குடியிருப்பதற்கு ஒரு காணித்துண்டும் அற்ற நிலையில் தனது குடும்பத்தாருடன் வாடகை வீடுகளில் வாழ்ந்து வந்தவர்.

இவரின் நிலையை உணர்ந்து அரச காணித்துண்டு ஒன்று வழங்கப்பட்டபோதும் அரசியல் அதற்குள் புகுந்து விளையாடியபோதும் நீதி இவர் பக்கமே வழங்கப்பட்டது.

அப்படியிருந்தும் அரசியல் தொடர்ந்து தாண்டவமாடி அதில் அவர் குடியிருக்க முட்டுக்கட்டையாக இருந்தபோதும் அதை பறைசாற்றாது எழிமை வாழ்வை வாழ்ந்தவர்.

பொது பணிகளில் குறிப்பாக மன்னார் பிரஜைகள் குழு ஆளுநர் சபையில் நீண்டகாலம் இணைந்தவராக மக்கள் குறைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுத்து மூலமாக சுட்டிக்காட்டி தீர்வுகளுக்கு வித்திட்டவர்.

மன்னாரில் விவசாயிகளுக்காக விவசாயம் மற்றும் குளங்கள் தொடர்பாக ஆய்வு கட்டுரைகள் பிரசுரிப்பதன் மூலம் விழப்புணர்வை உண்டாக்கியவர்.

அரசியலில் தமிழ் இனத்துக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தனது சொத்துக்களை இழந்து செயல்பட்டபோதும் அது கைகூடாமையால் தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெளி உலகிற்கு எடுத்துச்செல்ல ஆங்கில ஊடகவியலாளராக இணைந்தவர்.

மும்மொழிகளிலும் பாண்டியம் பெற்ற இவர் படித்தவன் என்ற அகங்காரம் அல்லாத காணி பூமி பணம் பொருளுக்கு ஆசைபடாத மனித நேயம் கொண்ட ஒரு மனிதன் பீ.ஏ.அந்தோனி மார்க்கை மன்னார் இழந்து நிற்கின்றது.

தன்னலமற்ற சேவையாளனை மன்னார் இழந்து நிற்கின்றது.

வாஸ் கூஞ்ஞ