posted 10th September 2021
கொவிட் 19 க்கான முதலாவது தடுப்பூசி 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கும் இவ்வேளையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை இத் தடுப்பூசியை பெறாதிருந்தால் காலம் தாழ்த்தாது உடன் இத் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும்படி மன்னார் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இத் தடுப்பூசியை பெறாதவர்கள் அடுத்த மாதம் தொடக்கம் வெளியில் நடமாட தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் சகல சுகாதார வைத்திய அதிகாரிகளின் பிரிவுகளிலும் கொவிட் 19 தொற்று நோய்க்கான சினோபாம் தடுப்பூசிகள் தற்பொழுது தொடர்ந்து வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
30 வயதுகளுக்கு மேற்பட்டவர்களுக்கு அதாவது ஏற்கனவே இத் தடுப்பூசிகள் பெறாதவர்களுக்கான நடவடிக்கை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே இத் தடுப்பூசியை பெறாதவர்கள் காலம் தாழ்த்தாது போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும்,
எந்த மாவட்டத்தவர்களாக இருந்தாலும் சினோவாம் தடுப்பூசிகளை இங்கு போட்டுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
அடுத்த மாதம் தொடக்கம் இத் தடுப்பூசியை போடாதவர்கள் வெளியில் நடமாட அனுமதிக்கப்பட மாட்டர்hகள் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வாஸ் கூஞ்ஞ