
posted 21st September 2021
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளராக டெனிசியஸ் கனியூட் அரவிந்தராஜ் கடந்த வாரம் முதல் தனது புதிய பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் யாழ் இந்து கல்லூரியன் பழைய மாணவரும், கண்டி பேராதெனிய பல்கலைக்கழகத்தில் விவசாய தொழில்நுட்பம், முகாமைத்துவம் ஆகிய கற்கை நெறியின் பட்டதாரியாகவும், அத்துடன் மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் உதவி ஆணையாளராகவும் கடமையாற்றியதுடன் பின் அவுஸ்ரேலியாவுக்குச் சென்று அங்கு பட்டப்படிப்பையும் மேற்கொண்டபின் கடந்த செவ்வாய் கிழமை (14) முதல் இவர் மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளராக தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

வாஸ் கூஞ்ஞ