
posted 27th September 2021
ஜெபம் செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மரணம் அடைந்த குடும்ப பெண்ணிற்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அல்வாய் வடமேற்கு, நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த செபபாக்கியம் கிறேஸ்மணி (வயது- 51) என்பவர் கோவளம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை(26) அவர் அங்கு ஜெபம் செய்து கொண்டிருந்தபது மயங்கிச் சரிந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு செய்யப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை(27) வைத்தியசாலைக்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன்