சைனோபாம்  தடுப்பூசி ஏற்ற ஆர்வமற்ற இளைஞர்கள்
சைனோபாம்  தடுப்பூசி ஏற்ற ஆர்வமற்ற இளைஞர்கள்

பணிப்பாளர் Dr ஜீ.சுகுணனின்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கான முதலாவது கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணனின் ஆலோசனைக்கு அமைவாக பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் குறித்த வயதெல்லைக்குரிய இளைஞர்களுக்கான முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில் இந்த முதலாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளது.

எனினும் குறித்த தடுப்பூசி ஏற்றும் நிலையங்களை அவதானித்த போது குறித்த வயதெல்லைக்குள்ளான இளைஞர்கள் இத்தடுப்பூசியை ஏற்றுவதற்கு ஆர்வம் கொண்டவர்களாக காணப்படாததனால் மிகவும் மந்தமான முறையிலேயே தடுப்பூசியை இளைஞர்கள் ஏற்றிக்கொள்கின்றனர்.

தற்பொழுது சைனோபாம் எனும் சீனத்தயாரிப்பான தடுப்பூசி ஏற்றப்படுவதனால் இளைஞர்கள் இத்தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகின்றது. வேறு ஒரு வகை தடுப்பூசியையே தாம் ஏற்றிக்கொள்ள விரும்புவதாகவும் கல்வி, தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்குமென்பதனால் தாம் எதிர்பார்க்கும் தடுப்பூசியை எதிர்பார்த்துள்ளதாகவும் சில இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சைனோபாம்  தடுப்பூசி ஏற்ற ஆர்வமற்ற இளைஞர்கள்

ஏ.எல்.எம்.சலீம்