
posted 24th September 2021
தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட மூவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்தமையை வன்மையாக கண்டிக்கின்றேன், இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியில் நேற்று அஞ்சலி செலுத்த முயன்ற கஜேந்திரன் எம். பி. கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் கருத்துரைத்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், உயிரழந்தவர்களை நினைவு கூருவது என்பது எமது அடிப்படை உரிமை, அதிலும் அகிம்சை வழியில் எமது இன விடுதலைக்காக உண்ணா நோன்பு இருந்து ஆகுதி ஆகிய தியாகி திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் கூறினார்.

எஸ் தில்லைநாதன்