
posted 12th September 2021

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் கொவிட் - 19 சிகிச்சைப் பிரிவுக்கு உணவுப்பண்டங்களைச் சூடாக வைத்திருக்கும் மைக்றோ அவன் ( Microwave Oven) ஒன்று இன்று சனிக்கிழமை அன்பளிப்புச் செய்யப்பட்டது.
நிந்தவூரின் கல்வித்தந்தை எனும் பெருமை பெற்ற கல்விமான், ஓய்வு பெற்ற அதிபர் காலஞ்சென்ற மர் ஹூம் சீ.ஓ.லெஸ்தகீர் அவர்களின் குடும்பத்தினர் சார்பாக இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற இந்த மைக்றோ அவன் கையளிப்பு நிகழ்வு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஏ.ஆர்.எம்.தௌபீக் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது மர் ஹூம் சீ.ஓ.லெஸ்தகீர் குடும்பத்தினர் அமைப்பின் சார்பாக, குடும்ப உறுப்பினர் நாசிம் நுஸ்லி, வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர். சஹீலா ராணி இஸதீனிடம் குறித்த மைக்றோ அவன் உபகரணத்தைக் கையளித்தார்.
சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் ஐ.எல்.உமரலி, குடும்ப உறுப்பினர் ரீ.ஏ.மஜீத் (நேரு அச்சகம்) உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம்