
posted 6th September 2021

மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் ஐ.அலியார்
மன்னாரில் 90 மில்லியன் ரூபா நிதியுதவில் சமூர்த்தி பயனாளிகளுக்கு பொருளாதார ரீதியாக பலப்படுத்தும் திட்டம் – சமூர்த்தி பணிப்பாளர் ஐ.அலியார்
மன்னார் மாவட்டத்தில் சமூர்த்தி பயனாளிகள் குடும்பத்தினரை தங்கள் பொருளாதார ரீதியாக பலப்படுத்தும் நோக்குடன் மன்னார் மாவட்ட ஐந்து பிரதேச செயலகங்களிலிருந்தும் 2400 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக இவர்களின் வாழ்வாதார உயர்வுக்காக அரச உதவியாக மன்னார் மாவட்டத்துக்கு 90 மில்லியன் ரூபா நிதி உதவியாக கிடைக்கப்பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் ஐ.அலியார் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் ஐ.அலியார் மேலும் தெரிவிக்கையில், தெரிவு செய்யப்பட்ட சமூர்த்தி பயனாளின் குடும்பங்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்தும் நோக்குடன் மன்னார் மாவட்டத்திலும் இத் திட்டம் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவர்களின் வாழ்வாதார உயர்வுக்காக அரச உதவியாக மன்னார் மாவட்டத்துக்கு 90 மில்லியன் ரூபா நிதி உதவியாக எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
இந் நிதியைக் கொண்டு இக் குடும்பங்களுக்கு விவசாயம், கைத்தொழில், மீன்பிடி, மீன் வளர்ப்பு இத்துடன் இவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்துக்குகாக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்களுக்கும் இதற்கான பயிற்சிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான சகல நடவடிக்கைகளும் சமூர்த்தி திணைக்களத்தின் ஆலோசனைகளுக்கு அமைவாகவும் மன்னார் மாவட்ட செயலாளரின் பணிப்புரைக்கு அமைவாகவும் இத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இத் திட்டங்கள் சிறந்த முறையில் இடம் பெறுவதற்கு இம் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் இதற்கான நிதிகளை விடுவித்துள்ளோம்.
இதனால் தற்பொழுது ஆரம்ப வேலைத் திட்டங்கள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இதன் பயனாளிகள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கவும் தங்கள் சுயதொழில்களிலும் இவர்கள் சார்ந்திருக்கின்ற தொழில்களிலும் தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான ஒரு பெரும் வாய்ப்பாக இது அமைந்துள்ளது என மன்னார் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் ஐ.அலியார் இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ