கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (30/09/2021)

வடக்கு மாகாணத்தில் இன்று (30/09/2021) வியாழக்கிழமை 4,824 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.

ஆனால், யாழ். போதனா மருத்துவமனையில் இன்று (30/09/2021) 201 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கோவிட் தொற்றாளர்களின் விபரம்;

1) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 5 பேர்
2) சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் ஒருவர்
3) தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் ஒருவர்
4) பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒருவர்
5) நொதேர்ன் சென்றல் தனியார மருத்துவமனையில் ஒருவர்

என மொத்தமாக 9 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.

இதேபோன்று;
1) வவுனியா பொது மருத்துவமனையில் 3 பேர்
2) வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேர்
3) செட்டிக்குளம் ஆதார மருத்துவமனையில் ஒருவர்
என மொத்தமாக 6 பேர் தொற்றார்களாக அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன்;
1) வெலிஓயா மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேர்
2) முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் 2 பேர்
3) மல்லாவி ஆதார மருத்துவமனையில் ஒருவர்
என மொத்தமாக 6 பேரும் தொற்றார்களாக அடையாளம் காணப்பட்டதுடன்

மேலும்;
1) மன்னார் பொது மருத்துவமனையில் 2 பேருமாக

நேற்று வடக்கு மாகாணத்தில் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கொரொனாவால் உயிரிழந்தவர்கள்

வவுனியாவில் உயிரிழந்த மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்துக்கு உயிரிழந்த ஐந்து பேரின் பிசிஆர் மாதிரிகள் அனுப்பப்பட்டிருந்தன.

அவற்றின் முடிவுகள் இன்று வியாழக்கிழமை வெளியாகியுள்ள நிலையில் உயிரிழந்த ஐவரில் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆர்.சின்னம்மா (வயது 78), இரத்தினசிங்கம் கமலாபவி (வயது 66), நடேசபிள்ளை மங்களேஸ்வரி (வயது 69) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (30/09/2021)

எஸ் தில்லைநாதன்