கோவிட் தொற்றாளரகளின் விபரங்கள்

பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்றபோது அவருக்கு அங்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியில் 14 பேர், யாழ்.மாவட்டத்தில் 36 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்றுசெவ்வாய்க்கிழமை 59 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 262 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவற்றின் விபரம் வருமாறு;

யாழ்.மாவட்டம் 36 பேர் - பலாலி விமானப்படை முகாமில் 09 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 05 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 05 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 04 பேர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், வீனஸ் ஹொஸ்பிரலில் ஒருவர், சென்ரல் நொதேர்ன் ஹொஸ்பிரலில் ஒருவர், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்டம் - 17 பேர்; மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 07 பேர், ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

வவுனியா மாவட்டத்தில் 03 பேர் - வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோவிட் தொற்றாளரகளின் விபரங்கள்

எஸ் தில்லைநாதன்