கோவிட் தொற்றலும் இறப்பும் அப்டேட் (24.09.2021)

வடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தில் நேற்று முன் தினம் 24ஆம் திகதிவரை 8 ஆயிரத்து 401 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 310 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத்துறையின் நேற்றைய அறிக்கையின் படி, நேற்று வவுனியா மாவட்டத்தில் 38 தொற்றாளர்களும் யாழ். மாவட்டத்தில் 30 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28 தொற்றாளர்களும் மன்னாரில் 10 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 2 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்று யாழ். மாவட்டத்தில் 5 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

2020 மார்ச் தொடக்கம் நேற்று முன் தினம் வரை வடக்கு மாகாணத்தில் 35 ஆயிரத்து 571 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 719 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அதிகப்படியாக யாழ். மாவட்டத்தில் 16 ஆயிரத்து 371 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 394 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் 15 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று சனிக்கிழமை 200 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் 15 பேர் - யாழ்.போதனா வைத்தியசாலையில் 05 பேர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 03 பேர், யாழ்ப்பாணம் மாநகரக சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பேர் - வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 04 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்.

வவுனியா மாவட்டத்தில் 06 பேர் - வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 05 பேர், வவுனியா சுகாதார விமானப்படை முகாமில் ஒருவர்.

கோவிட் தொற்றலும் இறப்பும் அப்டேட் (24.09.2021)

எஸ் தில்லைநாதன்