
posted 18th September 2021
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கோப்பாய் – இராச வீதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆலயம் ஒன்றுக்குச் சென்றுவிட்டு கோப்பாய் பக்கம் நோக்கிய திசையில் பயணித்துக்கொண்டிருந்தபோது எதிரே வந்துகொண்டிருந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான வாகனம் திடீரென திருப்ப முற்பட்டு முச்சக்கரவண்டியை மதிலோடு சேர்த்து மோதியதாக சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தின் போது குறித்த பகுதியில் குழாய்க்கிணறு அமைக்கும் தொழில் முயற்சியை மேற்கொண்டுவரும் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, அங்கு சென்ற பொலிஸார் மின்சாரசபை வாகனத்தையும் முச்சக்கவண்டியையும் அங்கிருந்து எடுத்துச் சென்றுவிட்டதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

எஸ் தில்லைநாதன்