posted 14th September 2021
கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பி.வீரசிங்க உடன் நடைமுறைக்கு வரும் வகையில் களனி பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
அவர் மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த முறைப்பாடுகளை அடுத்து இந்த இடமாற்றம் பொலிஸ் உயர்மட்டத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
களனி பொலிஸ் பிராந்தியத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பதவி நிலையிலிருந்து தரமிறக்கப்பட்டு அவர் இடமாற்றப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் அச்சுறுத்தல், கையூட்டுப் பெறல், முறைப்பாடுகளை தட்டிக்கழித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்