கொரோனாவால் மரணித்தவர்கள் 22ஆக உயர்வு

மன்னார் மாவட்டத்தில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு பெண்கள் இரு தினங்களில் கொரோனா தொற்றாளர்களாக இறந்ததைத் தொடர்ந்து மன்னாரில் இறந்தவர்களின் தொகை இருபத்திரண்டாக அதிகரித்துள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த முதலாம் திகதி (01.09.2021) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த எழுத்தூரைச் சார்ந்த பெண் ஒருவர் (வயது 71) கொரோனா தொற்றுடன் 07.09.2021 அன்று இரவும்

அத்துடன் 07.09.2021 அன்று காலை எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் (வயது 78) மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படடிருந்த நிலையில் இவர் புதன் கிழமை (08.09.2021) அதிகாலை கொரோனா தொற்றால் காலமானதாகவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

தற்பொழுது இவர்களின் உடல்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் தமிழ் பெண்ணின் உடலை எரியூட்டுவதற்காக வவுனியாவுக்கும் முஸ்லீம் பெண்ணின் உடல் அடக்கம் செய்வதற்காக கிழக்கு மாகாணம் ஓட்டமாவடிக்கும் வியாழக்கிழமை (09.09.2021) எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி செந்துபராஜா தெரிவித்தார்.

இவ்விருவரின் மரணத்தை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களாக மரணித்தவர்களின் தொகை 22 அக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் மரணித்தவர்கள் 22ஆக உயர்வு

வாஸ் கூஞ்ஞ