
posted 14th September 2021
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை
மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யோகராசா நிமலராசா (வயது 50) என்பவரே உயிரிழந்தவராவார்.
கிளிநொச்சியில் உயிரிழந்த இருவருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சண்முகம் ஆசை (வயது 94), வைரவன் பாக்கியம் (வயது 84) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

எஸ் தில்லைநாதன்