கொரோனாத் தொற்று அப்டேட் (9 மாதக் குழந்தை உட்பட) - 24.09.2021

ஒன்பது மாதமே ஆன பச்சிளம் குழந்தையுடன் யாழ். மாவட்டத்தில் 19 பேர் உட்பட வட மாகாணத்தில் 31 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று (செப்-24) 169 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு 31 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் - 19 பேர் - யாழ். போதனா வைத்தியசாலையில் - 07 பேர்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் - 04 பேர்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் - 03 பேர்
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் - 02 பேர்
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் - 02 பேர்
நொதேன் சென்ரல் ஹொஸ்பிரல் - ஒருவர் (9 மாத பெண் குழந்தை).

வவுனியா மாவட்டத்தில் - 08 பேர் - வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் - 06 பேர்
புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் - 02 பேர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர் (உயிரிழந்த முதியவருக்கு தொற்றுறுதி)
மல்லாவி ஆதார வைத்தியசாலையில் - ஒருவர்

கொரோனாத் தொற்று அப்டேட் (9 மாதக் குழந்தை உட்பட) - 24.09.2021

எஸ் தில்லைநாதன்