
posted 4th September 2021
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று காரணமாக நேற்று 10 பேர் உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏழு பேரும், வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொடிகாமத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஞா. பிரகாஷ் (வயது - 26) உயிரிழந்தார்.
போதனா மருத்துவமனையில் 10ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த 23 வயது இளைஞர், நெடுந்தீவை சேர்ந்த 70 வயது நபர், பருத்தித்துறையை சேர்ந்த 72 வயது ஆண், கந்தரமடத்தை சேர்ந்த 79 வயது ஆண் ஆகியோர் உயிரிழந்தனர்.
வடமராட்சி - அல்வாயை சேர்ந்த 75 வயது ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தெல்லிப்பழையை சேர்ந்த 76 வயது பெண்ணும் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் 47 வயது ஆணும், 86 வயது பெண்ணும் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 59 வயது ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்றும் தெரிய வருகின்றது.

எஸ் தில்லைநாதன்