கொரொனா தொற்றும், இறப்பும்

யாழ். போதனா மருத்துவமனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 156 பேரின் மாதிரிகளே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 43 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கொரொனா தொற்றாளர்களின் விபரங்கள்;

யாழ். போதனா மருத்துவமனையில் 9 பேர், சங்கானை மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேர், சாவகச்சேரி மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேர், நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிற்றலில் ஒருவர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒருவர், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் ஒருவர் என 17 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இது தவிர பலாலி இராணுவ முகாமில் ஐந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் 4 பேர், மல்லாவி ஆதார மருத்துவமனையில் 3 பேர், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் ஒருவர் என மாவட்டத்தில் 8 பேரும், கிளிநொச்சி பொது மருத்துவமனையில் 3 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இரணைமடு தனிமைப்படுத்தல் முகாமில் ஒரு தொற்றாளர் இனங்காணப்பட்டார்.

மன்னார் மாவட்டத்தில் பொது மருத்துவமனையில் இருவர் அடையாளம் காணப்பட்டனர். வவுனியா மாவட்டத்தில் பொது மருத்துவமனையில் நால்வர், நெடுங்கேணி பிரதேச மருத்துவமனையில் ஒருவர், வவுனியா இராணுவ முகாமில் 2 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.

கொரொனா வால் உயிரிழந்தவர்களின் விபரம்;

கிளிநொச்சியில் உயிரிழந்த இருவருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சண்முகம் ஆசை (வயது 94), வைரவன் பாக்கியம் (வயது 84) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

கொரொனா தொற்றும், இறப்பும்

எஸ் தில்லைநாதன்