
posted 19th September 2021
மாவட்டரீதியான கொரொனா தொற்றும், மரணங்களும்
யாழ்.போதனா வைத்தியசாலையில் 200 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேற்படி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் 27 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 09 பேர், யாழ்.சிறைச்சாலையில் 08 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 03 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பேர் - முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 08 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்.
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்.
வவுனியா மாவட்டத்தில் 09 பேர் - வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 07 பேர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் உயிரிழந்த இருவர், யாழ்.மாவட்டத்தில் உயிரிழந்த 02 என நான்கு பேர் உள்ளடங்குவதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னையச் செய்தி
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சரவணை முத்துலிங்கம் (வயது 91), ரி.சந்திரகாசன் (வயது 41, சாவகச்சேரி) ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர்.

எஸ் தில்லைநாதன்