
posted 20th September 2021
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, முதலியார் கோவில் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில், இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரவு 7 மணியளவில், முதலியார் கோவில் பகுதிக்கு வந்த குழு ஒன்று, அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியதுடன், வீட்டிலிருந்த குடும்பஸ்தர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு கதவு, ஜன்னல், வேலி மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்துள்ளதுடன், 7 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்