
posted 12th September 2021

கொரோனா தொற்று காலத்தில் கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட குளங்களுகளில் 3 இலட்சம் இறால் குஞ்சுகள் விடுவதற்கான ஏற்பாடுகள் மெசிடோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இதேவேளையில் மன்னார் பெரியமடு குளத்தில் 4 இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மற்றும் வடக்கு மாகாண சபையும் இணைந்து மன்னார் பெரியமடு குளத்தில் மீன் பிடி நடவடிக்கைகளுக்கு என 4 லட்சம் இறால் குஞ்சுகள் விடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (10.09.2021) மாலை இடம் பெற்றது.
கொரோனா தொற்று காலத்தில் கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அதேவேளை நன்னீர் மீன்பிடி தொழிலை ஊக்குவிப்பதற்காகவும் மேற்படி செயற்திட்டம் மெசிடோ நிறுவனத்தினால் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது
இவற்றிற்கான இறால் குஞ்சுகளை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்தது கொள்வனவு செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வில் டமன்னார் அனர்த்த முகாமைத்துவ உதவி ஆணையாளர் கனகரத்தினம் திலீபன், வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்கள், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மன்னர் மெசிடோ நிறுவன ஊழியர்கள் மற்றும் பெரியமடு நன்னீர் மீன்பிடி சங்கத்தின் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நன்னீர் இறால் வளர்ப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ