
posted 28th September 2021
அரசாங்கத்தின் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் தேசிய மட்டத்திலுள்ள ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுகளுக்கும் தலா மூன்று மில்லியன் ரூபா நிதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் திட்டம் முன்னெடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் ஒதுக்கப்பட இருக்கும் இந் நிதியின் வேலைத் திட்டங்களை அந்தந்த பிரதேச செயலகப் பிரிவுகளில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் ஆராயப்படுவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி இன்று செவ்வாய் கிழமை (28.09.2021) கீழ்வரும் நேர அட்டவணைகளுக்கு அமைவாக;
காலை 9 மணிக்கு மடு பிரதேச செயலகத்திலும்,
காலை 10.30 மணிக்கு மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலும்,
பிற்பகல் 12 மணிக்கு முசலி பிரதேச செயலகப் பிரிவிலும்
பிற்பகல் 2.30 மணிக்கு நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலும்
பிற்பகல் 3.30 மணிக்கு மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலும்
இவ் அபிவிருத்திக்கான கலந்துரையாடல்கள் இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ