posted 28th September 2021
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக்குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர்.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்குபற்றியுள்ளனர்.
தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பேசப்படுகின்றது.
எஸ் தில்லைநாதன்