எமது  நியாமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை பகிஷ்கரிப்பு தொடரும் - இல்ஹாம்

சுகாதார சேவைகள் பணியாளர்களின் நியாமான கோரிக்கைகளை சுகாதார அமைச்சும் இதன் திணைக்கள அதிகாரிகளும் வார்த்தைகளால் அல்ல செயல்வடிவில் தீர்த்துவைக்கும் வரை வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் எங்கள் போராட்டம் தொடரும் என மன்னார் மாவட்ட ஜனகஜ சுகாதார சேவைகள் சங்க தலைவரான எஸ்.எச்.எம்.இல்ஹாம் இவ்வாறு தெரிவித்தார்.

திங்கள் கிழமை (27.09.2021) பல சுகாதார தொழிற் சங்கங்கள் இணைந்து ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து நாடு பூராகவும் நடாத்திய போரட்டமானது மன்னார் பொது வைத்தியசாலையிலும் காலை 7 மணி தொடக்கம் நண்பகல் ஒரு மணிவரை இடம்பெற்றது.

இது தொடர்பாக மன்னார் மாவட்ட ஜனகஜ சுகாதார சேவைகள் சங்க தலைவரான எஸ்.எச்.எம்.இல்ஹாம் தெரிவிக்கையில்

எங்கள் மன்னார் மாவட்டம் உட்பட இலங்கை பூராகவும் நாங்கள் பல தொழிற் சங்கங்கள் இணைந்து எங்களுக்கான நியாமான சில கோரிக்கைகளை முன்வைத்து திங்கள் கிழமை (27.09.2021) பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இன்று (27) காலை 7 மணி தொடக்கம் நண்பகல் ஒரு மணி வரை இவ் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

இவ் போராட்டத்தில் நாங்கள் நியாயமான கோரிக்கைகளையே முன்வைத்து சுகாதார அமைச்சரிடம் ஊடாக தீர்த்துவைக்கும்படி கோரி நிறகின்றோம்.

கடந்த காலங்களில் எங்களுக்கு கொவிட் 19 தொடர்பாக வழங்கப்பட்ட விஷேட கொடுப்பனவு 7500 ரூபாவை தொடர்ந்து கொவிட் 19 தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரைக்கும் வழங்கும்படி நாங்கள் கோரி நிற்கின்றோம்.

அத்துடன் எங்களுக்கு இவ் கொவிட் தொற்று காலத்தில் வழங்கவேண்டிய சலுகைகள், கொடுப்பனவுகள் போன்ற விடயங்களை முன்வைத்தே இவ் போராட்டத்தை 21 சங்கங்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றோம்.

நாங்கள் தொடர்ந்து முன்வைத்து வரும் இவ் நியாமான கோரிக்கைகளை தீர்த்து வைக்காது தட்டிக்கழித்து வரும்பட்சத்தில் நாங்கள் எங்கள் பகுதிகளிலுள்ள நோயாளிகளுக்கு பாதிப்பு நடைபெறா வண்ணம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பதற்கான நிலைகளிலேயே இருந்து வருகின்றோம்.

நாங்கள் இன்று (திங்கள் கிழமை) இவ் போராட்டத்தை முன்னெடுத்தபோதும் எமது வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகள் பாதிப்புகளுக்கு உற்படாவண்ணம் எங்கள் செயல்பாடு அமைந்திருக்கின்றது.

எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டும்வரை நாங்கள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கும்போது எக்காரணம் கொண்டும் நோயாளிகள் பாதிப்புகளுக்கு உள்ளாகாத தன்மையிலேயே எங்கள் இவ்வாறான போராட்டம் தொடரும்.

ஆகவே எங்கள் நியாமான கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சர் அவ்வாறு சுகாதார திணைக்களத் தலைவர்கள் வார்த்தையளவில் அல்லாது செயல்வடிவம் கொண்டு தீர்க்கப்பட வேண்டும் எனக்கோரி நிற்கின்றோம் என இவ்வாறு தெரிவித்தார்.

எமது  நியாமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை பகிஷ்கரிப்பு தொடரும் - இல்ஹாம்

வாஸ் கூஞ்ஞ